உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகல்: டிரம்பின் முடிவுக்கு சர்வதேச சமூகம் விமர்சனம்
உலக சுகாதார அமைப்புடன் உறவை முறித்து அதற்கு கட்ட வேண்டிய கட்டணத்தை வேறு துறைகளுக்கு வழங்குவோம்..
உலக சுகாதார அமைப்புடன் உறவை முறித்து அதற்கு கட்ட வேண்டிய கட்டணத்தை வேறு துறைகளுக்கு வழங்குவோம் என்று டிரம்ப் 29ஆம் நாள் தெரிவித்தார். அவரது முடிவு குறித்து சர்வதேச அளவில் ஐயமும் விமர்சனமும் எழுந்துள்ளன.
ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதாண்மை மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கான உயர் நிலை பிரதிநிதி போர்ரெல் ஆகியோர் 30ஆம் நாள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டு, உலக சுகாதார அமைப்புடனான உறவை முறித்து கொள்வது குறித்து அமெரிக்கா மீண்டும் கருத்தில் கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர். ஐரோப்பிய ஒன்றியம், புதிய ரக கரோனா வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு முயற்சிக்கு உலக சுகாதார அமைப்புக்கு ஆதரவு அளித்து, சிறப்பு நிதி உதவியை வழங்கியுள்ளது என்று அவர்கள் கூறினர்.
அமெரிக்காவின் முடிவுக்கு ஜெர்மனி ஏமாற்றம் தெரிவித்துள்ளது. இது, உலக சுகாதார துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஜெர்மனி சுகாதார அமைச்சர் கூறினார்.
அமெரிக்காவின் நடவடிக்கை கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று இத்தாலி சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்