உலகம்

சின்ஜியாங் மக்கள் வாழ்க்கை மேம்பாடு

சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தின் மனித வளம் மற்றும் சமூகக் காப்புறுதி அலுவலகத்தின் தலைவர் ரெஹேமன்ஜியாங் தாவூதி ஜூன் 1ஆம் நாள்

DIN

சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தின் மனித வளம் மற்றும் சமூகக் காப்புறுதி அலுவலகத்தின் தலைவர் ரெஹேமன்ஜியாங் தாவூதி ஜூன் 1ஆம் நாள் கூறுகையில்,

வேலை வாய்ப்பை முன்னேற்றுவது சின்ஜியாங் மக்களுடன் தொடர்புடைய மிகப்பெரிய வாழ்வாதாரத் திட்டப்பணியாகும். சின்ஜியாங்கின் பல்வேறு தேசிய இன மக்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகளை உருவாக்கி, வருமானத்தை நிதானப்படுத்தும் வகையில், சின்ஜியாங் உள்ளூர் அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. வேலை வாய்ப்பை வழங்குவதில் கட்டாய உழைப்பு இல்லை. மக்களின் விருப்பத்துக்கு மதிப்பு அளிக்கப்பட்டு வருகின்றது என்றார்.

சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தில் மக்கள் வாழ்க்கை மேம்பாடு, வேலை வாய்ப்பு, கல்வி, மருத்துவம், சமூகம் காப்புறுதி, உறைவிட வசதிக் கட்டுமானம் உள்ளிட்ட ஆக்கப்பணிகளுக்கு உள்ளூர் அரசின் நிதிச் செலவில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமான பங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, சின்ஜியாங்கில் 9 ஆண்டுக் கட்டாயக் கல்வி நனவாக்கப்பட்டுள்ளது. சின்ஜியாங்கின் தெற்குப் பகுதியில் 15 ஆண்டுக் கட்டாயக் கல்வி நனவாகியுள்ளது. அனைத்துக் குழந்தைகளும் சமமான மற்றும் உயர் தரக் கல்வியைப் பெற முடியும் என்றும் அவர் கூறினார்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

பெலாரஸ் பறவை... ஸ்ரவந்திகா!

ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வா் அறிவிப்பு

இறந்தோரை வைத்து அற்ப அரசியல் செய்கிறது தவெக: ஆா்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT