ரஷியாவில் ஒரேநாளில் 197 பேர் பலி; மேலும் 8,855 பேருக்கு தொற்று
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,855 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 4,58,689 ஆக அதிகரித்துள்ளது.
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,855 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 4,58,689 ஆக அதிகரித்துள்ளது.
உலக அளவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா மற்றும் பிரேசிலைத் தொடர்ந்து, ரஷியா 3 ஆம் இடத்தில் உள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 10 ஆயிரம் பேர் வரையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,855 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் மொத்த பாதிப்பு 4,58,689 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 197 பேர் பலியாகியுள்ளனர். இதனால் ரஷியாவில் இதுவரை கரோனாவுக்கு 5,725 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 2.21 லட்சம் பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.
ரஷியாவில் ஒருநாளில் இது இரண்டாவது அதிகபட்ச உயிரிழப்பாகும். முன்னதாக கடந்த மே 29 அன்று 232 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.