உலகம்

சீனாவில் வறுமை ஒழிப்புப் பணியை முன்னேற்றும் வேளாண் துறை

DIN

சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் ஜுன் 9ஆம் நாள் நிங் சியா ஹுய் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் யின் ச்சுவான் நகரில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.

ஹே லான் மாவட்டத்திலுள்ள கிராம உயிரினச் சுற்றுலாப் பூங்கா, திராட்சைத் தோட்டம் ஆகிய இடங்களை அவர் மேற்பார்வையிட்டு, உள்ளூர் தனிச்சிறப்புடைய வேளாண் துறை மற்றும் ஹே லான் மலை பகுதியின் உயிரினப் பாதுகாப்பு பற்றி அறிந்து கொண்டார். 

ஹே லான் மாவடத்திலுள்ள கிராம உயிரினச் சுற்றுலாப் பூங்காவில், நெல் நிலம், மீன் குளம் உள்ளிட்டவற்றைக் காண முடியும். இயற்கை உயிரினச்சூழல், வேளாண்மை, மீன்பிடி, சுற்றுலாத் துறை ஆகியவை அங்கு செவ்வனே ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், உள்ளூர் விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளது. 

திராட்சை மது தொழிலின் வளர்ச்சியும், நிங் சியா ஹுய் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்துள்ளது. தகவலின்படி, ஆண்டுதோறும் இத்தொழில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வேலை வாய்ப்புகளையும் 90 கோடி யுவான் வருமானத்தையும் வழங்குகிறது. 

தொழிற்துறை வளர்ச்சியின் மூலமான வறுமை ஒழிப்பில், ஷி ச்சின்பிங் பெரும் கவனம் செலுத்தி வருகின்றார். இவ்வாண்டு பல்வேறு இடங்களைச் சேர்ந்த தொடர்புடைய தொழிற்துறைகளை அவர் மேற்பார்வையிட்டுள்ளார். ஷான்ஷி மாநிலத்தின் கருப்பு நிற மரக்காளான், சான்சி மாநிலத்தின் மஞ்சள் நிற தெய்லில்லி காய்கறி, நிங் சியா ஹுய் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பச்சை நிற நெல் நிலம் மற்றும் ஊதா நிற திராட்சை பழம் ஆகிய வண்ணமயமான வேளாண் பொருட்கள், விவசாயிகள் வறுமையிலிருந்து விடுபடுவதை முன்னேற்றும் முக்கிய ஆற்றலாகும்.

2020ஆம் ஆண்டு, குறிப்பிட்ட வசதி படைத்த சமூகத்தைப் பன்முகங்களிலும் கட்டியமைப்பதற்கான சீனாவின் மனவுறுதியை அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் ஆய்வுப் பயணத்தில் நாம் உணர்ந்து கொள்ள முடியும். 

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முட்டை விலை நிலவரம்

திருச்செங்கோடு வட்டார கல்வி நிறுவன வாகனங்கள் ஆய்வு

அட்கோ காவல் நிலையம் எதிரே குடியிருப்புக்குள் திருட முயற்சி

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன மாணவா்கள் களஆய்வு

குழந்தைத் திருமணங்கள் தொடா்பான புகாா்கள் மீது விரைந்து நடவடிக்கை: ஆட்சியா் உத்தரவு

SCROLL FOR NEXT