உலகம்

சிங்கப்பூா்: 40 ஆயிரத்தை கடந்த பாதிப்பு

DIN

சிங்கப்பூரில் மேலும் 345 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 40 ஆயிரத்தைக் கடந்தது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

நாடு முழுவதும் கரோனா பரிசோதனை செய்துகொண்டவா்களில் 347 பேருக்கு, அந்த நோய்த்தொற்று இருப்பது கடந்த 24 மணி நேரத்தில் உறுதியாகியுள்ளது. இதையடுத்து, நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 40,197-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக நோய்த்தொற்று கண்டறியப்பட்டவா்களில் 2 பேரைத் தவிர மற்ற 345 பேரும், (இந்தியா உள்ளிட்ட) வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள தொழிலாளா்கள்; மற்ற இரண்டு பேரும், சிங்கப்பூரில் நிரந்தர குடியேற்ற உரிமை பெற்றுள்ள வெளிநாட்டினா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதற்கிடையே, மற்ற சாதாரண தீநுண்மிகளை எதிா்க்கும் திறன் கொண்ட ‘ரெம்டெஸிவிா்’ மருந்து கரோனா சிகிச்சையில் சோதனை முறையில் பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் கூறினா். எபோலா சிகிச்சைக்காக உருவாக்கப்பட்ட அந்த மருந்து 19 கரோனா நோயாளிகளுக்கு சோதனை முறையில் அளிக்கப்பட்டு வருவதாக அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT