முகப்பு
உலகம்

நியூஸிலாந்தில் 24 நாள்களுக்குப் பின் இருவருக்கு கரோனா தொற்று

நியூசிலாந்தில் கடந்த 24 நாள்களாக புதிதாக யாருக்கும் கரோனா தொற்று கண்டறியப்படாத நிலையில், இன்று புதிதாக இரண்டு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம்

நியூஸிலாந்தில் 24 நாள்களுக்குப் பின் இருவருக்கு கரோனா தொற்று

நியூசிலாந்தில் கடந்த 24 நாள்களாக புதிதாக யாருக்கும் கரோனா தொற்று கண்டறியப்படாத நிலையில், இன்று புதிதாக இரண்டு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:48 PM
பகிர்:

வெலிங்டன்: நியூசிலாந்தில் கடந்த 24 நாள்களாக புதிதாக யாருக்கும் கரோனா தொற்று கண்டறியப்படாத நிலையில், இன்று புதிதாக இரண்டு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இரண்டு பேரும் பெண்கள் என்றும், இருவரும் தங்களது வயதான பெற்றோரைப் பார்க்க பிரிட்டனில் சிறப்பு அனுமதி பெற்று நியூசிலாந்து வந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் பிரிட்டனில் இருந்து ஜூன் 7-ம் தேதி தோஹா மற்றும் பிரிஸ்பேன் வழியாக விமானத்தில் பயணித்து நியூசிலாந்து வந்துள்ளனர். 

இவர்கள் 12-ம் தேதி வரை தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இறக்கும் தருவாயில் இருக்கும் தங்களது பெற்றோரைப் பார்க்க அனுமதி கேட்டிருந்த நிலையில், அன்று இரவே பெற்றோர் இறந்து விட்டனர். இதையடுத்து, அவர்கள் வெல்லிங்டன் பயணிக்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. அப்போதே ஒரு பெண்மணிக்கு லேசான அறிகுறிகள் தென்பட்ட போதும், விதிமுறைகளைத் தளர்த்தி அவர்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது. அங்கு அவர்கள் ஒரே ஒருவருடன் தங்கியிருந்தனர். தற்போது இரண்டு பெண்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த குடும்ப உறுப்பினரும் தனிமைப்படுத்தப்பட்டார்.

நியூசிலாந்தில் கரோனா தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து, அங்கு கடந்த வாரம் அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு, கரோனா வைரஸ் இல்லாத நாடாக அறிவிக்கப்பட்ட நிலையில், சரியாக 24 நாள்களுக்குப் பின் இரண்டு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது கரோனா கண்டறியப்பட்டிருக்கும் இரண்டு பெண்களும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்படவில்லை.

50 லட்சம் பேர் வசிக்கும் நியூசிலாந்தில், கடந்த பிப்ரவரி இறுதியில் கரோனா தொற்று பரவத் தொடங்கியது. அதன் பிறகு நாடு முழுவதும் கரோனா அறிகுறிகள் இருப்பவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில், சுமார் 1500 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி 22 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.

கடந்த 17 நாள்களில் 40,000 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் ஒருவருக்கு கூட கரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்தது. இதுவரை, நியூசிலாந்தில் ஒட்டுமொத்தமாக 3 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் கடந்த வாரம் பூரண குணமடைந்ததால், கரோனா தொற்று இல்லாத நாடாக நியூசிலாந்து மாறியது.

இதுகுறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் பேசுகையில், "கரோனாவை தற்போது கட்டுப்படுத்தினாலும்,  அடுத்த அலை வருவதை எதிர்கொள்வதற்கு முன்னெச்சரிக்கையுடன் தயாராக இருப்போம்' என்று குறிப்பிட்டிருந்தார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →