கோப்புப்படம் 
உலகம்

கரோனா பாதிப்பில் ஜெர்மனி 9ல் இருந்து 10-ம் இடத்துக்கு முன்னேறியது; ஒற்றை இலக்கத்தில் பலி எண்ணிக்கை

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 378 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 1,85,674 ஆக அதிகரித்துள்ளது. 

DIN

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 378 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 1,85,674 ஆக அதிகரித்துள்ளது. 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. ஆனால், அந்நாட்டின் தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே இங்கு பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

தொடர்ந்து, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 378 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,85,674 ஆக உயர்ந்துள்ளது. 

அதேபோன்று ஜெர்மனியில் இறப்பு விகிதமும் மிகவும் குறைவாகவே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் உயிரிழந்ததை அடுத்து, மொத்தமாக 8,800 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அந்நாட்டில் சுமார் 1.72 லட்சம் பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

அந்நாட்டின் தொற்று நோய்கள் குறித்த தரவுகளை அளிக்கும் ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் (ஆர்.கே.ஐ) மேற்குறிப்பிட்ட விவரங்களை வெளியிட்டுள்ளது.

உலக நாடுகள் பாதிப்பில் கடந்த சில வாரங்களாக 9 ஆம் இடத்தில் இருந்த ஜெர்மனி, பாதிப்பு குறைந்ததன் காரணமாக நேற்று 10 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 10 ஆம் இடத்தில் இருந்த ஈரான் 9 ஆம் இடத்தில் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற எம்.எல்.ஏ.

68 ஊா்க்காவல் படை வீரா்கள் நீக்கம்!

டைல்ஸ் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

நேரடியாக கோப்புகளைப் பெறாமல் மின்னணு அலுவலக முறைக்கு மாறும் தில்லி அரசின் நிதித்துறை

முன்னாள் ஊராட்சித் தலைவா் தற்கொலை விவகாரம்: காவல் ஆய்வாளா் உள்பட 7 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT