உலகளவில் கரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 81 லட்சத்தை எட்டியது
உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தோர் எண்ணிக்கை 81 லட்சத்தை எட்டிவிட்டது. பலி எண்ணிக்கை 4.39 லட்சமாக உயர்ந்துளள்து.
உலகம்உலகளவில் கரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 81 லட்சத்தை எட்டியது
உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தோர் எண்ணிக்கை 81 லட்சத்தை எட்டிவிட்டது. பலி எண்ணிக்கை 4.39 லட்சமாக உயர்ந்துளள்து.
உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தோர் எண்ணிக்கை 81 லட்சத்தை எட்டிவிட்டது. பலி எண்ணிக்கை 4.39 லட்சமாக உயர்ந்துளள்து.
உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே பெரும், அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை அடுத்து 4 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தநிலையில் உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இதையும் படிக்கலாம்.. நியூஸிலாந்தில் 24 நாள்களுக்குப் பின் இருவருக்கு கரோனா தொற்று
உலகம் முழுவதும் கரோனாவால் 81,18,671 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,39,198 பேர் மரணம் அடைந்துள்ளனர். 42,16,319 குணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் அதிகபட்சமாக 21,82,950 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,18,283 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 8,91,556 பேரும், ரஷ்யாவில் 5,37,210 பேரும் தொற்று நோய்க்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 3,43,091 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 9,915 பேர் பலியாகியுள்ளனர்.