கோப்புப்படம் 
உலகம்

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,600 பேருக்கு தொற்று; மேலும் 95 பேர் பலி

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,600 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 5,92,280 ஆக அதிகரித்துள்ளது. 

DIN

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,600 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 5,92,280 ஆக அதிகரித்துள்ளது. 

உலக அளவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா மற்றும் பிரேசிலைத் தொடர்ந்து, ரஷியா 3 ஆம் இடத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 10 ஆயிரம் பேர் வரையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில தினங்களாக பாதிப்பு சற்று குறைந்து சராசரியாக 8 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. 

இந்நிலையில், ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,600 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் மொத்த பாதிப்பு 5,92,280 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 95 பேர் பலியாகியுள்ளனர். இதனால் ரஷியாவில் இதுவரை கரோனாவுக்கு 8,206 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 3,44,416 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்ரவரி மாதப் பலன்கள் - துலாம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கன்னி

பெருமாநல்லூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: இருவர் பலி!

பிப்ரவரி மாதப் பலன்கள் - சிம்மம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கடகம்

SCROLL FOR NEXT