உலகம்

ஆப்கனில் வான்வழித் தாக்குதல்: 25 தலிபான்கள் பலி

ஆப்கானிஸ்தானில் ராணுவம் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 25 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

DIN

ஆப்கானிஸ்தானில் ராணுவம் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 25 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

ஆப்கானிஸ்தானின் வடக்கு பால்க் மாகாணத்தில் உள்ள தவ்லத் அபாத் கிராமத்தில் தலிபான்களைக் குறிவைத்து அந்நாட்டு ராணுவம் புதன்கிழமை இரவு வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 25 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் முனீர் அகமது ஃபர்ஹாத் தெரிவித்துள்ளார். 

மேலும், இந்தத் தாக்குதலின்போது அருகிலிருந்த விவசாயி ஒருவரது வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் ஒரு பெண், குழந்தை உட்பட நான்கு பேர் பலியானதாகவும் ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் இந்த தகவலை ராணுவ தரப்பினர் நிராகரித்துள்ளனர். 

அதேசமயம், 25 தலிபான்கள் கொல்லப்பட்டது குறித்து தலிபான் தரப்பில் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT