உலகம்

அமெரிக்காவின் சில இடங்களில் கொவைட்-19 நிலைமை மோசம்:ஃபாவ்சி

DIN


அமெரிக்காவின் புகழ்பெற்ற கொள்ளை நோயியல் நிபுணரும் கொவைட்-19 நோய் சமாளிப்புக்கான வெள்ளை மாளிகைப் பணிக்குழுவின் முக்கிய உறுப்பினருமான ஆண்டனி ஃபாவ்சி 26ஆம் நாள் கொவைட்-19 நோய் பற்றிய வெள்ளை மாளிகையின் கூட்டத்தில் பேசிய போது, அமெரிக்காவின் சில பகுதிகள் கடுமையான பிரச்சினையை எதிர்நோக்குகிறது என்பதை பல்வேறு மாநிலங்களில் கொவைட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு வெளிக்காட்டியுள்ளது. இது பெரும் கவலை அளிப்பதாய் உள்ளது என்று தெரிவித்தார்.

பொருளாதாரச் செயல்களை மிக முன்னதாகவே மீண்டும் தொடங்குவது, பொது மக்கள் நோய்த்தொற்று தடுப்புக்கான விதிமுறையைப் பின்பற்றாதது ஆகியவை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கான காரணங்களாகும். எதிர்காலத்தில் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க முடியவில்லை என்றால் தற்போது நோயாளிகள் குறைந்து வருகின்ற மாநிலங்கள் மீண்டும் பாதிப்படையும். கூட்டாகச் செயல்படுவதே இந்நோய் பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரேயொரு வழிமுறை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தவிரவும், அண்மையில் அமெரிக்காவின் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் செய்தியாளருக்குப் பேட்டியளிக்கையில், சில ஆசிய நாடுகளை விட அமெரிக்க அரசு எடுத்துள்ள நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் குறைவு என்று குறிப்பிட்டார். 

தகவல்:சீன ஊடகக் குழுமம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT