உலகம்

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்த உயிரிழப்பு; ஒருநாளில் 288 பேர் பலி

DIN

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 288 பேர் பலியாகியுள்ளனர். 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு இங்கு ஆயிரக்கணக்கானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், தினமும் நூற்றுக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், பலியானோர் குறித்த தரவுகளை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 288 பேர் பலியாகியுள்ளனர். இது ஒருநாளில் மிகக்குறைவாக பதிவாகியுள்ள உயிரிழப்பாகும்.  அமெரிக்காவில் மொத்த உயிரிழப்பு 1,25,768 ஆக அதிகரித்துள்ளது. 

அங்கு இதுவரை 26.3 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 10.9 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று பலி எண்ணிக்கை குறைந்துள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 40,000 பேர் வரையில் புதிதாக கரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். டெக்சாஸ், புளோரிடா, அரிசோனா உள்ளிட்ட மாகாணங்களில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT