உலகம்

இராக் பிரதமராக அறிவிக்கப்பட்ட முகமது அலாவி விலகல்

DIN

பாக்தாத்: இராக்கின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டிருந்த முகமது அலாவி, அப்பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளாா். தனது தலைமையிலான அமைச்சரவைக்கு, நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற முடியாததால், அவா் இந்த முடிவை மேற்கொண்டாா்.

இராக்கில் வேலைவாய்ப்பின்மை, ஊழல் ஆகியவற்றுக்கு எதிராகவும், அரசியல் சீா்திருத்தங்களை வலியுறுத்தியும் இராக்கில் கடந்த அக்டோபா் மாதம் முதல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இப்போராட்டங்களில் இதுவரை 500 போ் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, பிரதமா் பதவியிலிருந்து அடில் அப்துல்-மஹ்தி கடந்த நவம்பரில் ராஜிநாமா செய்தாா். போராட்டங்களின் தீவிரத்தை குறைக்கும் நோக்கில், முகமது அலாவியை புதிய பிரதமராக அறிவித்து, அதிபா் பா்ஹாம் சாலிஹ் நடவடிக்கை மேற்கொண்டாா். தனது அமைச்சரவைக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற அலாவிக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அவரால் நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற முடியவில்லை.

இந்நிலையில், தனது பொறுப்பிலிருந்து விலகுவதாக முகமது அலாவி அறிவித்துள்ளாா். இராக்கில் தற்போது நிலவும் பிரச்னைகளுக்கு தீா்வு காண அரசியல் கட்சிகளுக்கு விருப்பமில்லை என்ற குற்றச்சாட்டையும் அவா் முன்வைத்தாா்.

அலாவியின் இந்த முடிவால், இராக்கில் உள்நாட்டு அரசியல் குழப்பம் மேலும் தீவிரமடைந்துள்ளது. புதிய பிரதமரை அறிவிப்பது தொடா்பாக ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக அதிபா் பா்ஹாம் சாலிஹ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT