ஈரான், இந்தியா இடையே நாளை முதல் சிறப்பு விமானங்கள் இயக்கம்: ஈரான் தூதரகம்
ஈரான், இந்தியா இடையே நாளை முதல் சிறப்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக ஈரான தூதரக அலுவலர் தெரிவித்துள்ளார்.
ஈரான், இந்தியா இடையே நாளை முதல் சிறப்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக ஈரான தூதரக அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஈரான் தூதரக அலுவலர் தெரிவித்ததாவது:
"இந்தியாவில் உள்ள ஈரான் நாட்டினரை தெஹ்ரானுக்கு அழைத்துச் செல்ல தில்லிக்கு நாளை காலி விமானம் அனுப்பப்படவுள்ளது. மேலும், ஈரானில் உள்ள இந்தியர்களுக்கான உபகரணங்களை எடுத்துச் செல்ல மேலும் ஒரு விமானம் நாளை மறுநாள் இந்தியாவுக்கு அனுப்பப்படவுள்ளது.
ஈரான் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான சிறப்பு விமானங்கள் நாளை முதல் இயக்கப்படவுள்ளது. ஈரானில் 2,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். இந்தியாவின் முறையான அனுமதி பெற்ற பிறகே அவர்கள் இந்தியாவுக்கு திரும்ப அனுப்பப்படுவார்கள்" என்றார்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் ஈரானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3513 ஆக உள்ளது. இதில், இதுவரை 107 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.