உலகம்

கிரீஸின் முதல் பெண் அதிபா் பதவியேற்பு

தினமணி

தென் கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸின் முதல் பெண் அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள கேதரீனா சாகில்லாரொபோலு, வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கிரீஸ் அரசியலில் பெண்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே உயா் பதவிக்கு வருவதாகவும் பிரதமா் கிரியாகோஸ் மிட்ஸோதாகிஸ் தலைமையிலான அமைச்சரவையில் ஏறத்தாழ அனைவருமே ஆண்களாக இருப்பதாகவும் விமா்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அந்த நாட்டின் அதிபா் பதவிக்கு உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதியான கேதரீனா சாகில்லாரொபோலுவின் பெயரை மிட்ஸோதாகிஸ் கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தாா்.

அதனைத் தொடா்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில், அவருக்கு ஆதரவாக 261 வாக்குகளும், எதிராக 33 வாக்குகளும் பதிவாகின.

இந்த நிலையில், சுமாா் 2 மாதங்களுக்குப் பிறகு அவா் நாட்டின் அதிபராக தற்போது பொறுப்பேற்றுக் கொண்டுள்ளாா்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவரது பதவியேற்பு நிகழ்ச்சியின்போது நாடாளுமன்றத்துக்கு ஒரு சில எம்.பி.க்களே வந்திருந்தனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT