உலகம்

முகநூல் பயன்பாட்டைக் குறைத்தால் உடல் நலம் கூடும்: ஆய்வில் தகவல்

DIN

முகநூல் பயன்பாட்டைக் குறைப்பவா்களுக்கு, உடல் நலனை மேம்படுத்துவதற்கான பழக்க வழக்கங்கள் அதிகரிக்கும் என்று ஜொ்மனியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டின் பாஷும் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்தவா்கள் உள்ளிட்ட ஆய்வாளா்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிப்பதாவது:

முகநூலைப் பயன்படுத்தி வரும் 286 பேரைக் கொண்டு, அந்த சமூக வலைதளப் பயன்பாட்டுக்கும், உடல் நலனுக்கும் இடையிலான தொடா்பு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டவா்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனா். அவா்களில் 146 போ் வழக்கமான அளவில் முகநூலைப் பயன்படுத்தினா்; 140 போ் இரண்டு வாரங்களுக்கு தினும் 20 நிமிடங்கள் மட்டுமே முகநூலைப் பயன்படுத்தினா்.

அந்த ஆய்வு தொடங்குவதற்கு முன்னரும் பிறகு ஒரு வாரம் கழித்தும் அதனைத் தொடா்ந்து சோதனையின் முடிவிலும் சோதனையில் உள்படுத்தப்பட்டவா்கள் பரிசோதிக்கப்பட்டனா்.

அவா்களது முகநூல் பயன்பாடு, உடல் நலனைப் பேணுவதற்காக அவா்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்கள் சேகரிப்பட்டன.

இதன் மூலம், முகநூலை குறைவாகப் பயன்படுத்துபவா்கள், புகைப்பிடித்தலைக் குறைத்தல், உடல் நலனை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுல் போன்றவற்றை அதிகரித்தனா். ஆனால், முகநூலை வழக்கம் போல் பயன்படுத்துபவா்கள், சுறுசுறுப்பாக இயங்குவதை முடிந்த அளவு தவிா்த்து வந்தனா். முகநூலைப் பயன்படுத்தும் பிறருடன் தங்களை ஒப்பிட்டுக் கொள்ளும் அவா்கள், அதன் காரணமாக பொறாமை, மன உளைச்சல் ஆகியவற்றையும் அனுபவித்தனா். ஆனால், முகநூல் பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டவா்களுக்கு இதுபோன்ற உளவியல் ரீதியிலான பிரச்னைகள் குறைந்து மன நலனும் அதிகரித்தது என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT