உலகம்

கரோனா அச்சுறுத்தல்: இலங்கையில் மார்ச் 23ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு

DIN

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் இன்று முதல் மார்ச் 23ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இந்தச் சூழலில், அந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சா்வதேச நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன. 

அண்டை நாடான இலங்கையில் கரோனா வைரஸுக்கு இதுவரை 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கரோனா பரவலைத் தடுக்க இலங்கை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஏற்கெனவே 2 வாரங்களுக்கு வெளிநாட்டு விமானச் சேவைக்கு தடை விதித்ததோடு மட்டுமல்லாமல் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறையும் அறிவித்திருந்தது. 

இந்த நிலையில்  இலங்கையில் இன்று முதல் மார்ச் 23ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ச பிறப்பித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT