லிபியாவில் முதல் நபருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி
லிபியாவில் முதல் நபருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
லிபியாவில் முதல் நபருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவை அச்சுறுத்திய கரோனா வைரஸ் தற்போது உலக முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடித்து வருகின்றன.
வைரஸ் (கொவைட்-19) பாதிப்பால் உலகம் முழுவதும் இதுவரை உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தைக் கடந்தது. உலக நாடுகளிலேயே கரோனா வைரஸ் பாதிப்பால் இத்தாலியில்தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலையில் லிபியாவில் முதல் நபருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் எமிட் பின் ஒமர் அதிகாரபூர்வமாக தெவித்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்டவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.