முகப்பு
உலகம்

உதவியாளருக்கு கரோனா: தனிமைப்படுத்தப்பட்டார் இஸ்ரேல் பிரதமர்

உதவியாளருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால்  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தனிமைப்படுத்தப்பட்டார்.

Updated On : 30 மார்ச், 2020 at 7:02 PM
பெஞ்சமின் நெதன்யாஹு
பகிர்:

டெல் அவிவ்: உதவியாளருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால்  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தனிமைப்படுத்தப்பட்டார்.

இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை மேற்கோள் காட்டி அந்நாட்டு ஊடகங்களில் திங்களன்று வெளியாகியுள்ள செய்திகளில் கூறப்படுவதாவது:

பிரதமரின் நெருங்கிய உதவியாளர் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று திங்களன்று உறுதிப்படுத்தப்பட்டது.

Advertisement

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேறு இரண்டு உதவியாளர்களுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இஸ்ரேலைப் பொறுத்தவரை இதுவரை அங்கு 4,213 பேர் கரோனா பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன் 16 பேர் இதுவரை கரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.