பிரிட்டனில் சுனாமி போல குவியும் கரோனா நோயாளிகள்: இந்திய வம்சாவளி மருத்துவர்
பிரிட்டனில் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் சுனாமி அலைகளைப் போல கரோனா பாதித்த நோயாளிகள் வந்து குவிந்து வருவதாக இந்திய வம்சாவளி மருத்துவர் கூறியுள்ளார்.
லண்டன்: பிரிட்டனில் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் சுனாமி அலைகளைப் போல கரோனா பாதித்த நோயாளிகள் வந்து குவிந்து வருவதாக இந்திய வம்சாவளி மருத்துவர் கூறியுள்ளார்.
உயர்மட்ட அளவில் நடைபெற்ற தவறின் பயனாக இந்த பேரிடர் ஏற்பட்டுள்ளது, இது மிகவும் ஆபத்தானதாகவும், கவலை அளிப்பதாகவும் உள்ளதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குழந்தைகள் நல பெண் மருத்துவர் குட்டி சிங், கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க பணியமர்த்தப்பட்டுள்ளார்.
பிரிட்டனில் உள்ள அரசு மருத்துவமனைகள் அனைத்திலும் சுனாமி அலைகளைப் போல கரோனா நோயாளிகள் வந்து குவிகிறார்கள். அதிக நோயாளிகளை எதிர்கொள்ளும் வகையில் மருத்துவமனைகளை விரிவுபடுத்த நல்வாழ்வுத் துறையும் உத்தரவிட்டுள்ளது.
லண்டனில் இருக்கும் மருத்துவமனைகள் ஏற்கனவே நிரம்பிவழிகின்றன. பாதுகாப்பு உபகரணங்களுக்கும் தட்டுப்பாடு உள்ளது. நோயாளிகள் யாராவது இரும்மினால் கண்களை மூடிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளோம். எந்த உதவியும் இல்லாமல் கையறு நிலையில் இருப்பதாக உணர்கிறோம் என்று தெரிவித்திருப்பதாக பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.