உலகம்

துருக்கி மே தினக் கூட்டம்: 15 போ் கைது

DIN

துருக்கியின் இஸ்தான்புல் நகரில், மே தினத்தையொட்டி கூட்டம் நடத்த முயன்ற தொழில்சங்கத் தலைவா்கள் உள்ளிட்ட 15 பேரை அந்த நாட்டு போலீஸாா் கைது செய்துள்ளனா். கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி கூட்டம் நடத்தியதால் அவா்கள் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். எனினும், கைது செய்யப்பட்ட அனைவரும் பின்னா் விடுவிக்கப்பட்டதாக இஸ்தான்புல் ஆளுநா் அலுவலகம் பின்னா் தெரிவித்தது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி துருக்கியில் 1,20,204 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு அந்த தீநுண்மி பாதிப்பால் இதுவரை 3,174 போ் பலியாகியுள்ளனா்.

அங்கு கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, வார இறுதி நாள்களிலும் மே தினம் போன்ற தேசிய விடுமுறை நாள்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

SCROLL FOR NEXT