உலகளவில் கரோனா நோய்த்தொற்றுக்குப் பாதித்தோர் எண்ணிக்கை 35 லட்சத்தைக் கடந்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவுடன் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எனினும், பல நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் உலகளவில் கரோனா பாதிப்பு 35 லட்சத்தைத் தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 35 லட்சத்து 652 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 45 ஆயிரத்து 48 ஆக உள்ளது. இதில், 11 லட்சத்து 28 ஆயிரத்து 466 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
கரோனா நோய்த் தொற்றுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதுவரை 11 லட்சத்து 60 ஆயிரத்து 996 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 67 ஆயிரத்து 448 ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.