கரோனா எதிரொலி: ஆஸ்திரேலியாவில் தற்கொலை விகிதம் 50% உயரும் அபாயம்
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவு காரணமாக ஆஸ்திரேலியாவில் தற்கொலை விகிதம் 50% உயரும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
கான்பெர்ரா: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவு காரணமாக ஆஸ்திரேலியாவில் தற்கொலை விகிதம் 50% உயரும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
கரோனா பேரிடர் காரணமாக ஏற்பட்ட பொருளாதார பின்னடைவுகள், மன ரீதியிலான பாதிப்பை ஏற்படுத்துவதன் காரணமாக, தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை 50% அதிகரிக்கும் அபாய ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் மனநல மருத்துவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், கரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதன் காரணமாக ஆண்டு தோறும் இறப்பு விகிதம் சுமார் 1,500 அளவுக்கு அதிகரிக்கும் என்றும், இது தற்போது ஆண்டுக்கு தற்கொலை செய்வோரின் எண்ணிக்கையான 3000ல் 50% ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
உயரும் தற்கொலை விகிதத்தில் 30 சதவீதம் அளவுக்கு 15 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கும் என்றும், ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் மேலும் மோசமடைந்தால் இந்த தற்கொலை எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் 6,894 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் 97 பேர் மரணம் அடைந்துள்ளனர்.