பாகிஸ்தானில் கரோனாவுக்கு பலியாவோர் எண்ணிக்கை உயர்வு
பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை காலை நிலவரப்படி 24 ஆயிரத்தைக் கடந்தது. நேற்று ஒரே நாளில் கரோனா பாதித்து 38 பேர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை காலை நிலவரப்படி 24 ஆயிரத்தைக் கடந்தது. நேற்று ஒரே நாளில் கரோனா பாதித்து 38 பேர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கரோனா பாதித்து பலியாவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அந்த நாட்டில் இதுவரை 564 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து அந்த நாட்டு தேசிய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,523 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் சோ்த்து, நாட்டில் அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 24,073-ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 38 போ் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தனா். இதையடுத்து அந்த நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 564-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.