உலகம்

கரோனா வைரஸால் உயிரிழந்த அமெரிக்கர்களில் மூன்றில் ஒரு பங்கு முதியவர்கள்

DIN

கரோனா நோய்த் தொற்றுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கரோனா வைரஸ் தொற்று 210 நாடுளுக்குப் பரவியுள்ளது. நொடிக்கு நொடி பாதிப்பும், பலியும் அதிகரித்து வருவதால் பேரச்சத்தில் அமெரிக்கர்கள் உள்ளனர். 

இந்நிலையில், அமெரிக்காவில் இதுவரை 13 லட்சத்து 67 ஆயிரத்து 638 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 80 ஆயிரத்து 787 ஆக அதிகரித்துள்ளது. 

அமெரிக்காவில் உயிரிழந்தவர்களில் மூன்றில் ஒரு பங்கு முதியவர்கள் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாள் கடந்த மே 9ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் முதியோர் இல்லங்களில் 25 ஆயிரத்து 600 முதியவர்களும், பணியாளர்களும் புதிய ரக கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவிலுள்ள 7,500 முதியோர் இல்லங்களிலுள்ள 1 லட்சத்து 43 ஆயிரம் பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT