உலகம்

உலகளவில் கரோனா தொற்று பாதித்தவர்களில் 15 லட்சம் பேர் குணமடைந்தனர்

DIN


கரோனா தீநுண்மி பரவத் தொடங்கி கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், உலகளவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 42 லட்சத்தை எட்டியுள்ளது. கரோனா பாதித்து சிகிச்சை பலனின்றி இதுவரை 2,87,463 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனினும் நம்பிக்கை அளிக்கும் வகையில் உலக அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42,68,490 ஆக இருந்தாலும், இதுவரை சிகிச்சையின் பலனாக 15,33,369 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தற்போது உலகளவில் கரோனா தொற்று பாதித்து 24,47,658 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

அந்த வகையில் கரோனா தொற்று பாதித்தவர்களில் 84 சதவீதம் பேர் அதாவது 15 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 16 சதவீதம் பேர், 2,87,463 பேர் மரணம் அடைந்துள்ளனர். இது மருத்துவர்களுக்கும், கரோனா நோயாளிகளுக்கும் நம்பிக்கையளிக்கும் செய்தியாகவே உள்ளது.

அதிக பாதிப்பைக் கொண்ட அமெரிக்காவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 13 லட்சத்தை எட்டிவிட்டது, பலியானோர் எண்ணிக்கை 81 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதே சமயம், 2 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT