உலகம்

உலகளவில் 3 லட்சத்தைத் தாண்டியது கரோனா பலி

DIN


கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் உலகளவில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

முதலில் சீனாவில் பாதிப்பை உண்டாக்கிய கரோனா வைரஸ் நோய்த் தொற்று படிப்படியாக உலக நாடுகளுக்கும் பரவத் தொடங்கியது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் இந்த நோய்த் தொற்றால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. இந்த நோய்த் தொற்றால் தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிப்படைந்துள்ளன.

இந்த நிலையில், கரோனா தொற்றால் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை உலகளவில் 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும் 85,463 பேர் பலியாகியுள்ளனர்.

நாடுபாதிப்புபலி
உலகம்44,82,9623,00,388
அமெரிக்கா14,37,72685,524
பிரிட்டன்2,33,15133,614
இத்தாலி2,23,09631,368
ஸ்பெயின்2,72,64627,321
பிரான்ஸ்1,78,06027,074

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஆல் இன் ஆல்‘ அழகுராணி!

அமோனியா கசிவு விவகாரம்: கோரமண்டல் ஆலைக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

மோகன்லால் பிறந்தநாள்: எம்புரான் போஸ்டர்!

கேரளத்துக்கு அதி கனமழைக்கான ’சிவப்பு’ எச்சரிக்கை!

மும்பை அணியின் ஒற்றுமையை உறுதி செய்திருக்க வேண்டும்: ஹர்பஜன்

SCROLL FOR NEXT