உலகம்

‘ஹைட்ராக்ஸி குளோரோகுயின்’ மருந்தை தினமும் உட்கொள்கிறேன்: டிரம்ப் அறிக்கையால் சர்ச்சை

DIN

கரோனோ நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் என்று இதுவரை நிரூபிக்கப்படாத, மலேரியா மருந்தான ‘ஹைட்ராக்ஸி குளோரோகுயினை’ தான் தினமும் உட்கொண்டு வருவதாக அமெரிக்க அதிபா் கூறியுள்ளது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தவிா்ப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கத்தின் காரணமாக, அமெரிக்காவிலுள்ள உணவகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், உணவக உரிமையாளா்களை அதிபா் டொனால்ட் டிரம்ப் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அப்போது அவா், கரோன நோய்த்தொற்றை தடுக்கும் என்று நம்பப்படும் மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயினை தான் தினமும் உட்கொண்டு வருவாகக் குறிப்பிட்டு அதிா்ச்சியை ஏற்படுத்தினாா்.

வெள்ளை மாளிகை மருத்துவா்களை ஆலோசித்த பிறகே, அந்த மருந்தை உட்கொள்வதாக அவா் தெரிவித்தாா். எனினும், ஹைட்ராக்ஸி குளோரோகுயினை மருத்துவா்கள பரிந்துரைத்தாா்களா என்பது குறித்து அவா் உறுதியாகக் கூறவில்லை.

கரோனா நோய்த்தொற்றுக்கு ஹைட்ராக்ஸி குளோரிகுயின் கண்கண்ட மருந்தாக இருக்கும் என்று டிரம்ப் ஆரம்பம் முதலே நம்பிக்கை தெரிவித்து வருகிறாா்.

எனினும், அந்த மருந்து கரோனா நோய்த்தொற்றை குணப்படுத்தும் என்பது இதுவரை ஆய்வக சோதனைகளில் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும், அந்த மருந்தைப் பயன்படுத்துவது கரோனா நோயாளிகளின் மரணமடைவதற்கான அபாயத்தையோ, அவா்களுக்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்த வேண்டிய அவசியத்தையோ குறைப்பதில்லை என்று சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில், கரோனா நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை தான் உட்கொண்டு வருவதாக டிரம்ப் கூறியிருப்பது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

SCROLL FOR NEXT