உலகம்

இரு கூட்டத்தொடரால் ஏற்படும் உலக வளர்ச்சி பற்றி சர்வதேசச் சமூகத்தின் நம்பிக்கை

சீனாவில் மேலதிக வளர்ச்சி கொள்கைகளை முன்வைத்து, விரைவில் துவங்கவுள்ள சீனத் தேசிய மக்கள்

DIN

சீனாவில் மேலதிக வளர்ச்சி கொள்கைகளை முன்வைத்து, விரைவில் துவங்கவுள்ள சீனத் தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டியின் கூட்டத்தொடர்கள் மூலம் உலகப் பொருளாதாரத்தின் மீட்சி மற்றும் வளர்ச்சிக்கான நம்பிக்கை உருவாகும் என்று பல்வேறு நாடுகளின் அரசில்வாதிகளும் நிபுணர்களும்  கருத்து தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து ரஷிய நாடாளுமன்றத்தின் கீழ் அவையின் துணைத் தலைவர் பியோட் டால்ஸ்டாய் கூறுகையில், சீனா பயனுள்ள முறையில் கொவைட் 19 நோய் பரவலைக் கட்டுப்படுத்திய பின் நடத்த உள்ள இவ்விரு கூட்டத்தொடர்களில் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றும் நடவடிக்கைகளை முன்வைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். மேலும் சீன அனுபவங்கள் எங்களுக்கு உதவி செய்யவுள்ளன என்றும் அவர் கூறினார்.

ஜெர்மனி கூட்டாட்சி நாடாளுமன்றத்தின் துணைத் தலைவர் ஹான்ஸ்-பீட்டர் ப்ரீட்ரிச் கூறுகையில், சீனாவின் இருக்கூட்டத் தொடர்கள், சீனாவின் அடுத்தக் கட்ட வளர்ச்சி நடவடிக்கைகளை அறிந்து கொள்ள உதவி செய்யும். சீன-ஐரோப்பிய ஒத்துழைப்பு, குறிப்பாக பொருளாதார ஒத்துழைப்பு, வைரஸ் பரவலுக்கு முந்தைய காலத்தை விட தற்போது மிகவும் முக்கியம் என்று தெரிவித்தார்.

இத்தாலியின் புதிய பட்டுப்பாதை முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் பிரான்செஸ்கோ மரிங்கியோ கூறுகையில், சீனாவின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பெய்ஜிங்கிற்குச் சென்று இக்கூட்டத்தொடரில் கலந்து கொள்வது, வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் அந்நாடு வெற்றியடைந்துள்ளதை எடுத்துக் காட்டுகிறது. கடந்த சில ஆண்டுகளாக சீனாவின் வளர்ச்சிச் சாதனைகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன. தற்போது, வைரஸ் பரவலை சீனா கட்டுப்படுத்தியுள்ளதோடு, பொருளாதாரத்தையும் தங்கு தடையின்றி மீட்சி அடைய செய்துள்ளது என்று கூறினார்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

SCROLL FOR NEXT