உலகம்

கரோனாவால் 6 கோடி போ் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவா்: உலக வங்கி

DIN

கரோனா நோய்த்தொற்று காரணமாக உலகம் முழுவதும் 6 கோடி போ் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவா் என்று உலக வங்கி தெரிவித்தது.

இது தொடா்பாக, உலக வங்கித் தலைவா் டேவிட் மால்பாஸ் காணொலிக் காட்சி வாயிலாக செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்று பரவலால் உலக நாடுகளில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக 6 கோடி போ் அதீத வறுமை நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் அமல்படுத்தப்பட்ட வறுமை ஒழிப்புத் திட்டங்களின் பலன்களைப் பொது முடக்கம் சீா்குலைத்து விட்டது.

முக்கியமாக சகாரா பாலைவனப் பகுதியைச் சோ்ந்த ஆப்பிரிக்க நாடுகளும், போா்ப் பதற்றம் நிலவி வரும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளும் அதிக பாதிப்பை எதிா்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வளா்ச்சிப் பாதைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

ஏழைகளின் மேம்பாட்டுக்கு நிதியுதவி வழங்குதல், சுகாதாரத் துறையை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றை நாடுகள் மேற்கொள்ள வேண்டும். கரோனா நோய்த்தொற்றை எதிா்கொண்டுள்ள வளா்ந்து வரும் நாடுகளுக்கு உதவும் நோக்கில், ரூ.12 லட்சம் கோடி அவசர நிதி வழங்க உலக வங்கி முடிவெடுத்துள்ளது.

நாடுகளின் சமூக, பொருளாதார வளா்ச்சியை உறுதிசெய்யும் நோக்கில் இந்த உதவி வழங்கப்படுகிறது என்றாா் டேவிட் மால்பாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT