உலகம்

பாகிஸ்தானில் ஒரே நாளில் 15,346 பேருக்கு கரோனா பரிசோதனை: 2,193 பேருக்குத் தொற்று

PTI

பாகிஸ்தானில் கரோனா தொற்று நோய்க்குப் பாதித்தோர் எண்ணிக்கை 48 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக அந்த நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,193 பேருக்குப் புதிதாக நோய்த் தொற்று பதிவாகியுள்ளது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 32 பேர் பலியானதைத் தொடர்ந்து, மொத்த உயிரிழப்புகள் 1,017 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அந்த நாட்டில் மொத்த பாதிப்பு 48,091 ஆக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 15,346 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை அந்த மாநிலத்தில் 4,29,600 பேருக்கு கரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான சோதனைகளை நடத்தியதாகச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதுவரை 14,155 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானுக்கு ஒரு நாளைக்கு 30,000 சோதனைகள் போதுமானதாக இருக்கும் என்று திட்ட அமைச்சர் அசாத் உமர் செவ்வாய்க்கிழமை கூறியதை அடுத்து தினசரி சோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

தற்போது ஒரு நாளைக்கு 25,000 சோதனைகளை நடத்தக்கூடிய நிலையில் உள்ளது. மே-இறுதி அல்லது ஜூன் தொடக்கத்தில் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் சோதனைகளை நடத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT