உலகம்

இவ்வாண்டு பல்வகை இலக்குகள் நிறைவேற்றப்படும்: சீனா நம்பிக்கை

DIN

ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் அரசுப் பணியறிக்கை ஓராண்டில் சீனாவின் பொருளாதார மற்றும் கொள்கைகளின் போக்கு பற்றி அறிந்து கொள்வதற்குரிய முக்கிய வழிமுறையாகும்.

வெள்ளிக்கிழமை சீனத் தலைமை அமைச்சர் 13ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 3ஆவது கூட்டத் தொடரின் துவக்க விழாவில் வழங்கிய அரசுப் பணியறிக்கையில் முழு ஆண்டின் அதிகரிப்பு இலக்கு தெரிவிக்கப்படவில்லை என்பது கவனத்துக்குரியது. வேலைவாய்ப்பு, மக்களின் அடிப்படை வாழக்கை, வறுமை ஒழிப்பு, நுகர்வோர் விலைவாசி உள்ளிட்ட துறைகளில் ஒட்டுமொத்தமாக எவ்வாறு சரிசெய்வது என்பது இந்த அறிக்கையில் விவரமாக முன்வைக்கப்பட்டது. 

தற்போது, உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து பரவி வருகிறது. இதனால் உலகப் பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சி காணப்பட்டுள்ளது. உலக நாணய நிதியம் கடந்த ஏப்ரலில் வழங்கிய உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் என்ற அறிக்கையில், இவ்வாண்டு உலகப் பொருளாதாரம் 3 விழுக்காடு குறையும் என்று மதிப்பிட்டுள்ளது. கடந்த நூற்றாண்டின் 30ஆம் ஆண்டுகளில் இருந்த பெரும் பொருளாதார வீழச்சிக்குப் பின் நிகழ்ந்த மிக மோசமான நிலைமை இதுவாகும். பல மதிப்பிடப்பட முடியாத புதிய நிலைமையை சீனா எதிர்நோக்கி உள்ளது. இந்தப் பின்னணியில் சீன அரசு நடைமுறை நிலைமைக்கேற்ப இவ்வாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி இலக்கை வகுக்கவில்லை.

ஆனாலும், நிதிக்கொள்கை, நாணயக் கொள்கை உள்ளிட்ட இதர வளர்ச்சி இலக்குகளிலிருந்து சீனாவின் பொருளாதார வளர்ச்சிப் போக்கு பற்றி அறிந்து கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, நகரங்களில் 90 இலட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல். நுகர்வோர் விலைவாசி குறியீடு அதிகரிப்பு 3.5 விழுக்காட்டுக்குள் கட்டுப்படுத்துதல், நடைமுறை வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள கிராம வறிய மக்கள் அனைவரையும் வறிய வட்டங்களையும் வறுமையிலிருந்து விடுவித்தல் உள்ளிட்ட இலக்குகளை சீன அரசு வகுத்துள்ளது. இது பற்றி தி ஆஸ்திரேலியன் ஃபைனன்ஷல் லிவேயூ வெளியிட்ட கட்டுரையில், பொருளாதார வளர்ச்சி இலக்கு வகுப்பதன் வழக்கத்தைச் சீனா கடைபிடிக்கவில்லை. மாறாக, வேலை வாய்ப்பு மற்றும் மக்களின் வாழ்க்கை தரத்துக்கு முன்னுரிமை வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

கரோனா வைரஸ் பரவல் சீனாவின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலைமையைச் சமாளிக்கும் போது உயிருக்கு முதலுரிமை வழங்குவதில் சீன அரசு ஊன்றி நின்று வருகின்றது. நோய் பாதிப்பைக் கூடிய அளவில் குறைக்கும் வகையில் இந்த அறிக்கையில் குறிப்பிட்ட நடவடிக்கைகளையும் முன்வைக்கப்பட்டது. 

ஒட்டுமொத்தமாக பார்த்தால், இவ்வாண்டின் பற்றாக்குறை விகிதம் 3.6 விழுக்காடு அளவில் இருக்கும். நிதிப் பற்றாக்குறை அளவு கடந்த ஆண்டில் இருந்ததை விட ஒரு இலட்சம் கோடி யுவானுக்கு அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தவிரவும், நோய் தடுப்புக்கான ஒரு இலட்சம் கோடி யுவான் அரசுக் கடன் பத்திரத்தை அரசு வெளியிடும்.

மேலும், தொழில் நிறுவனங்களுக்கு உதவி அளிக்கும் வகையில், வழங்கப்படும் நிதியுதவியை இவ்வாண்டு 2 இலட்சத்து 50 ஆயிரம் யுவானை நிதியுதவி அதிகரிக்கும். தற்போதைய சந்தையில் முக்கியத்துவம் வாய்ந்த நடுத்தர மற்றும் சிறிய தனியார் தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் இன்னல்களை நீக்க இது துணை புரியும். பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகள், நகரங்களில் வேலை பார்த்து வரும் விவசாயிகள் உள்ளிட்ட நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகளை அரசு சிறப்பாக ஏற்பாடு செய்யும். வெளிப்புறச் சூழல் நிதானமற்ற நிலையில், உள்நாட்டுத் தேவையை விரிவாக்குவதன் மூலம் சீனப் பொருளாதாரத் துறையின் நெகிழ்த் திறனை அதிகரிக்க முடியும். 

மேலும் தரமான வெளிநாட்டுத் திறப்புக்கொள்கையை சீனா கடைபிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. உலக விநியோகச் சங்கிலியைப் பேணிக்காக்கும் சீனாவின் இம்முயற்சி உலகிற்கான ஒரு முக்கிய உத்தரவாதமாகும். 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமா் மோடி இன்று வேட்புமனு தாக்கல்

இன்று காலை 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

இன்று யோகம் யாருக்கு?

இன்று இனிய நாள்!

கலை, அறிவியல் படிப்புகளுக்குத் திரும்பும் மாணவா்களின் கவனம்!

SCROLL FOR NEXT