உலகம்

ஒரு டாலருக்கு விற்கப்பட்ட செய்தி நிறுவனம்

DIN


பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த நியூஸீலாந்தின் முன்னணி செய்தி ஊடகமான ஸ்டஃப் லிமிடட் வெறும் ஒரு டாலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை ஸ்டஃப் லிமிடட் உரிமையாளரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நைன் என்டர்டெயின்மென்ட் நிறுவனமே அறிவித்துள்ளது.

இதுபற்றி நைன் என்டர்டெயின்மெண்ட் தெரிவித்திருப்பதாவது, நியூ ஸீலாந்தின் முன்னணி செய்தி ஊடகமாக விளங்கும் ஸ்டஃப் செய்தி ஊடகத்தை அதன்  முதன்மை செயல் அலுவலர் ஸினீத் பௌச்சரே வாங்கிக் கொண்டார் என்று கூறியுள்ளது.

ஸ்டஃப் செய்தி ஊடக விற்பனை தொடர்பான நடைமுறைகள் மே 31-ம் தேதி நிறைவு பெறும். 1993ம் ஆண்டு செய்தியாளராக இந்நிறுவனத்தில் பணியில் சேர்ந்தவர் பௌச்சர். கிட்டத்தட்ட அவர் தனது முழு பணிக்காலத்தையும் இந்த நிறுவனத்திலேயே கழித்துள்ளார். தற்போது ஸ்டஃப் நிறுவனத்தின் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கை போன்றவற்றால், பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில், ஊடகங்களும் அதில் தப்பவில்லை.

இதனால், ஸ்டஃப் ஊடகமும், ஊழியர்களின் ஊதியக் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நிலையில் தான், இந்த நிறுவனம், ஒரு டாலருக்கு அதன் முதன்மை செயல் அலுவலருக்கே விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது ஊரடங்கால் ஊடகங்கள் சந்தித்திருக்கும் மிகப்பெரிய நெருக்கடியை எடுத்துக் காட்டுவதாகவே இது உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

SCROLL FOR NEXT