முகப்பு
உலகம்

ரஷியாவில் 4 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு

​ரஷியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 3,96,575 ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:43 PM
கோப்புப்படம்
பகிர்:


ரஷியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 3,96,575 ஆக உயர்ந்துள்ளது.

ரஷியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளன. இதன்படி, அந்த நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,952 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 3,96,575 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள நாடுகளில் ரஷியா தற்போது 3-வது இடத்தில் உள்ளது.

மேலும் 181 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 4,555 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், 8,212 பேர் குணமடைந்ததையடுத்து, மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,67,469 ஆக உயர்ந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →