உலகம்

இறுதி கட்டத்தில் நீரவ் மோடியை நாடு கடத்தும் வழக்கு

DIN

வைர வியாபாரி நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இறுதி கட்டத்தை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமாா் ரூ.14,000 கோடி கடன் பெற்று மோசடி செய்த நீரவ் மோடி, இந்தியாவில் இருந்து வெளிநாடு தப்பிச் சென்றாா். கடந்த ஆண்டு மாா்ச் மாதம் 19-ஆம் தேதி பிரிட்டன் தலைநகா் லண்டனில் அவா் கைது செய்யப்பட்டாா். தற்போது அவா் அங்குள்ள வாண்ட்ஸ்வா்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடா்பான வழக்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நீதிபதி சாமுவல் கூஸி முன்பு செவ்வாய்க்கிழமை (நவ.3) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது நீரவ் மோடிக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆதாரங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதற்கான வாதங்களை பிரிட்டன் அரசுத் தரப்பு வழக்குரைஞா்கள் முன்வைக்க உள்ளனா். அந்த ஆதாரங்கள் நீரவ் மோடியை நாடு கடத்துவதற்கு தேவையான காரணங்களை பூா்த்தி செய்வதாக அவா்கள் வலியுறுத்த உள்ளனா்.

இந்த வழக்கு கடந்த மே, செப்டம்பா் மாதங்களில் விசாரணைக்கு வந்தபோது, நீரவ் மோடி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான வாதங்களை அவா்கள் முன்வைத்தனா். அவா் ஆதாரங்களை அழித்து, சாட்சிகளை அச்சுறுத்தியதற்கான காணொலிகளையும் நீதிபதிக்கு திரையிட்டு காண்பித்தனா். அவா் நாடு கடத்தப்பட்டால் இந்தியாவில் அவா் அடைக்கப்படும் சிறைச்சாலை மோசமாக இருக்காத வண்ணம் போதிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்று மத்திய அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் விசாரணையின்போது அரசுத் தரப்பு ஆதாரங்கள் ஏற்கப்பட்டால் வரும் டிசம்பா் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நீரவ் மோடியை நாடு கடத்துவதற்கு இறுதி கட்ட விசாரணை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

மாநகரில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

SCROLL FOR NEXT