உலகம்

ஜோ பிடன் கட்சியினர் சதி செய்ய முயற்சி: டிரம்ப்

DIN

தேர்தல் முடிவில் ஜோ பிடன் கட்சியினர் சதி செய்ய முயற்சிப்பதாக டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 

'ஜனநாயக கட்சியினர் தேர்தலில் சதி செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால், நாங்கள் அவ்வாறு செய்ய விடமாட்டோம். வாக்குப்பதிவு முடிந்தபின்னர் ஓட்டு போட முடியாது. 

மிகப்பெரிய வெற்றி வரப்போகிறது. இன்று இரவு ஓர் அறிக்கை வெளியிடப்போகிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

இந்நிலையில், எதிர்க்கட்சிகள் சதி செய்ய முயற்சிப்பதாக கூறிய டிரம்ப்-இன் கருத்துக்கு ட்விட்டர் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

'டிரம்பின் பதிவு சர்ச்சைக்குரியதாக உள்ளது என்றும் இது தேர்தல் முடிவுகளை தவறாக வழிநடத்தும்' என்றும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், ஜோ பிடன் 237 வாக்குகளும், டிரம்ப் 213 வாக்குகளும் பெற்று முன்னிலையில் இருந்து வருகின்றனர். தேர்தலில் வெற்றி பெற 270 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதக்கிணறு ஊராட்சியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காவலா்களுக்கு மன அழுத்தம் குறைப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

புற்றுநோயாளிகளுக்கு கூந்தல் தானம் அளித்த செவிலியா்கள்

கோபியில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

SCROLL FOR NEXT