உலகம்

அமெரிக்க தேர்தலில் வென்று முதல் திருநங்கை எம்.பி.யான சாரா மெக்ப்ரைட்

DIN

அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட திருநங்கையான சாரா மெக்ப்ரைட் பிரதிநிதிகள் அவையின் உறுப்பினராக தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் செவ்வாய்க்கிழமை தொடங்கி, இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த வாக்குப் பதிவின் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள முடிவுகள், முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் அமெரிக்க வரலாற்றில் ஒரு திருநங்கை பிரதிநிதிகள் அவையின் உறுப்பினராக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். 30 வயதான சாரா மெக்ப்ரைட் எனும் அவர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஸ்டீவ் வாஷிங்டனை வீழ்த்தி, திருநங்கைகளில் இருந்து முதல் எம்.பி.யாக தேர்வு பெற்றுள்ளார்.

சாரா ஓர்பால் ஈர்ப்பு அமைப்பின் வழக்குரைஞர் குழுவின் மனித உரிமைகள் பிரசார பத்திரிகை செயலாளராகவும், முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிர்வாகப் பணியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT