உலக அளவில் கரோனா பாதிப்பு 4.84 கோடியாக உயர்வு
உலக அளவில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 84 லட்சத்தை கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
வாஷிங்டன்: உலக அளவில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 84 லட்சத்தை கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் 216 நாடுகளுக்கு கரோனா நோய்த்தொற்று பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பத்து மாதங்களை கடந்தும் அதன் வீரியமும் வேகமும் குறையாமல் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்பபடி 4 கோடியே 84 லட்சத்து 20 ஆயிரத்து 101 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 3,46,70,601 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
உலக முழுவதும் இதுவரை 12,30,757 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தொற்று பாதித்தவர்களில் அதிகயளவில் குணமடைந்தவர்களின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 77,10,630 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு இதுவரை 98,01,355 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,39,829 பேர் உயிரிழந்துள்ளனர்.
நோய்த்தொற்று பாதிப்பில் இந்தியா மற்றும் பிரேசில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளது. இந்தியாவில் 83,63,412 பேரும், பிரேசிலில் 55,90,941 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு பட்டியலில் 1,61,170 உயிரிழப்புகளுடன் பிரேசில் இரண்டாவது இடத்திலும், 1,24,354 உயிரிழப்புகளுடன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
கரோனா நோய்த்தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்புக்கு மோசமான நாடுகளின் பட்டியலில் ரஷ்யாவில் 16,93,454 பாதிப்பு மற்றும் 29,217 உயிரிழப்புகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.