முகப்பு
உலகம்

”77 நாட்களில் அமெரிக்கா பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இணையும்”: ஜோ பிடன்

77 நாட்களுக்குள் அமெரிக்கா பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இணையும் என அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் அறிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:48 PM
ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன்
பகிர்:

77 நாட்களுக்குள் அமெரிக்கா பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இணையும் என அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் செவ்வாய்க்கிழமை தொடங்கி, இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த வாக்குப் பதிவின் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள முடிவுகள், முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

எனினும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிப்பதில் தொடர்ந்து இழுப்பறி நீடித்து வருகிறது. இந்நிலையில் காலநிலை மாற்ற பாதிப்புகளுக்கு எதிரான பாரிஸ் பருவநிலை மாநாட்டு ஒப்பந்தத்தில் அமெரிக்கா இணைவது குறித்து ஜோ பிடன் கருத்து தெரிவித்துள்ளார்.

அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு 2017ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் புதன்கிழமை பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகியது.

2015 பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியிருப்பது குறித்து ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் "சரியாக 77 நாட்களில் எனது நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கா மீண்டும் பருவநிலை ஒப்பந்தத்தில் இணையும்." என உறுதியளித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →