ரஷியாவில் மேலும் 20,498 பேருக்கு கரோனா தொற்று
ரஷியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 20,498 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 20,498 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷியாவில் கடந்த சில தினங்களாக கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷியா 4-ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் ரஷியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 20,498 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 20,498 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,74,334ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றுக்கு மேலும் 286 பேர் பலியாகினர்.
Advertisement
இதையடுத்து ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 30,537 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கரோனா தொற்றில் இருந்து 1,324,419 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 419,378 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.