பிரேசிலில் கரோனா பாதிப்பு 57 லட்சத்தைக் கடந்தது!
பிரேசிலில் கரோனா பாதிப்பு 57 லட்சத்தைக் கடந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
பிரேசிலில் கரோனா பாதிப்பு 57 லட்சத்தைக் கடந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
உலக அளவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் 3 ஆம் இடத்தில் பிரேசில் உள்ளது. பிரேசிலில் கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் சமீபமாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் புதன்கிழமை அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
Advertisement
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,012 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 201 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் நாட்டில் கரோனா பாதிப்பு 57 லட்சத்தைக் கடந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, 57,01,283 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த உயிரிழப்பு 1,62,829 ஆக உள்ளது. அதேநேரத்தில் 50,64,344 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும், 4,74,097 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 8,318 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.