முகப்பு
உலகம்

புளோரிடாவில் வெள்ளம்: கரோனா பரிசோதனைகள் நிறுத்திவைப்பு

புளோரிடா மாகாணத்தில் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரோனா பரிசோதனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Updated On : 11 நவம்பர், 2020 at 4:23 PM
புளோரிடாவில் வெள்ளம்: கரோனா பரிசோதனை நிறுத்திவைப்பு
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:21 PM

புளோரிடா மாகாணத்தில் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரோனா பரிசோதனைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் ஹார்ட் ராக் திடலில் அதிக அளவிலான மக்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மேற்கு கியூபாவில் நிலைகொண்டிருந்த இட்டா எனும் வெப்பமண்டலப் புயல் நேற்று புளோரிடா நோக்கி நகர்ந்ததால், புளோரிடா மாகாணத்தில் தொடர் கனமழை பெய்தது. 

Advertisement

இதன் விளைவாக அதிக அளவில் கரோனா பரிசோதனை செய்து வந்த ஹார்ட் ராக் திடல் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இதனால் கரோனா பரிசோதனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

வளைகுடா நாடுகளின் கடற்கரையை நோக்கி புயல் நகர்வதால், இந்தப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் புளோரிடாவைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கரோனா பரிசோதனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.