முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் கரோனா பலி 7,000 -ஐத் தாண்டியது!

பாகிஸ்தானில் புதிதாக 1,078 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. மேலும் 21 பேர் பலியாகியுள்ளனர். 

Updated On : 11 நவம்பர், 2020 at 2:01 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:21 PM

பாகிஸ்தானில் புதிதாக 1,078 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. மேலும் 21 பேர் பலியாகியுள்ளனர். 

பாகிஸ்தானில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,078 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.

இதனால், மொத்த பாதிப்பு 3,48,184 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நாட்டில் கரோனா தொற்றுக்கு 21 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 7,021 ஆக உயர்ந்துள்ளது. 

Advertisement

அதேசமயத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இதுவரை 3,20,065 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 21,098 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.