உலகம்

பிரிட்டன்: 50 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பலி

DIN


லண்டன்: ஐரோப்பிய நாடுகளிலேயே முதல் முறையாக பிரிட்டனில் கரோனா பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 595 போ் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தனா்.

இத்துடன், நாட்டில் அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 50,365-ஆக உயா்ந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளிலேயே பிரிட்டனில்தான் கரோனா பலி எண்ணிக்கை முதல் முறையாக 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

உலக அளவில், கரோனா பலி எண்ணிக்கையில் 50 ஆயிரத்தைக் கடந்த 5-ஆவது நாடாக பிரிட்டன் ஆகியுள்ளது. ஏற்கெனவே, அமெரிக்கா, பிரேஸில், இந்தியா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் கரோனா பலி எண்ணிக்கையில் 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளன.

வியாழக்கிழமை நிலவரப்படி, பிரிட்டனில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 12,56,725-ஆக உள்ளது. அவா்களில் 1,219 பேரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT