முகப்பு
உலகம்

மெக்சிகோவில் மேலும் 7,646 பேருக்கு கரோனா: 588 பேர் பலி

மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,646 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 588 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:51 PM
Mexico reports 7,646 more COVID-19 cases, 588 deaths
பகிர்:

மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,646 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 588 பேர் உயிரிழந்தனர்.

பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் வட அமெரிக்காவைச் சேர்ந்த மெக்சிகோவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,646 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,86,177-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 588 பேர் பலியானதால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 96,430-ஆக அதிகரித்துள்ளது. 

லத்தீன் அமெரிக்காவில் பிரேசிலுக்குப் பிறகு இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான மெக்சிகோ பெருந்தொற்றால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.