ஐரோப்பாவிலேயே பிரிட்டனில்தான் கரோனா பலி 50 ஆயிரத்தை எட்டியது
ஐரோப்பிய கண்டத்திலேயே, பிரிட்டனில்தான், கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டியதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவிலேயே பிரிட்டனில்தான் கரோனா பலி 50 ஆயிரத்தை எட்டியது
லண்டன்: ஐரோப்பிய கண்டத்திலேயே, பிரிட்டனில்தான், கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டியதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
மேலும், கரோனாவுக்கு பலியானோர் அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்கலாமே.. தமிழகத்தில் ஆட்சியர்கள் உள்பட 14 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
பிரிட்டனில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவலில், நாட்டில் இதுவரை 12,56,725 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 22,950 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 595 பேர் கரோனாவுக்கு பலியானதை அடுத்து, புதன்கிழமையன்று பிரிட்டனில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 50,365 ஆக உயர்ந்துள்ளது. உலகிலேயே கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்த ஐந்தாவது நாடாக உள்ளது. முன்னதாக, அமெரிக்கா, பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இன்னும் நாம் கரோனாவிலிருந்து மீளவில்லை, ஒவ்வொரு உயிரிழப்பும் ஒரு பேரிடிதான். கரோனாவுக்கு பலியான ஒவ்வொருவருக்கும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.