முகப்பு
உலகம்

ரஷியாவில் மேலும் 21,983 பேருக்கு கரோனா; 411 பேர் பலி

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21,983 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 13 நவம்பர், 2020 at 3:35 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:22 PM

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21,983 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ரஷியாவில் கடந்த மாதம் கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சராசரியாக ஒருநாள் கரோனா பாதிப்பு 20 ஆயிரத்தைக் கடந்து பதிவாகி வருகிறது. இதையடுத்து ரஷியாவில் பொதுமுடக்க விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. தலைநகர் மாஸ்கோவில் உணவகங்கள், மதுபானக் கடைகள் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை மூடப்பட்டுள்ளன. 

இந்நிலையில், அந்நாட்டு சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21,983 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 18,80,551 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று கடந்த 24 மணி நேரத்தில் 411 பேர் உள்பட இதுவரை 32,443 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

அதேநேரத்தில் தற்போதுவரை 14,06,903 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், இன்றைய நிலவரப்படி 4,41,205 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 5,974 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.