உலகளவில் கரோனா பாதிப்பு 5.53 கோடியாக உயர்வு
உலக அளவில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5.53 கோடியாக உயர்ந்துள்ளன.
உலக அளவில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5.53 கோடியாக உயர்ந்துள்ளன.
உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்பபடி 5 கோடியே 53 லட்சத்து 49 ஆயிரத்து 674 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 3,84,93,649 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
உலக முழுவதும் இதுவரை 13,32,328 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தொற்று பாதித்தவர்களில் 1,55,23,697 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 99,776 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
Advertisement
உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,15,38,057 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,52,651 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.