உலகம்

உலக அளவில் கரோனா பாதிப்பு 5.59 கோடி: பலி 13.43 லட்சமாக உயர்வு

DIN

வாஷிங்டன்: உலக அளவில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 59 லட்சத்து 43 ஆயிரத்து 122 ஆக உயர்ந்துள்ளன என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் 217  நாடுகளுக்கு கரோனா நோய்த்தொற்று பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்பபடி 5 கோடியே 59 லட்சத்து 43 ஆயிரத்து 122 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 3,89,63,186 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

உலக முழுவதும் இதுவரை 13,43,378 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தொற்று பாதித்தவர்களில் 1,56,36,558 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 1,00,743 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,16,95,711 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,54,255 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

SCROLL FOR NEXT