முகப்பு
உலகம்

அமெரிக்காவில் புதிய உச்சத்தில் தினசரி பாதிப்பு: புதிதாக 1,94,000 பேருக்கு கரோனா

அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,94,000 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 21 நவம்பர், 2020 at 4:29 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:25 PM

அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,94,000 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இங்கு நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக  1,94,000 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. 

இதையடுத்து தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,19,08,396 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் தொற்று காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் 1,880 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 260,312ஆக உயர்ந்துள்ளது. 73,17,731 தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் 46,98,981 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.